கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அன்று பாடியநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்திபன் அருகில் உள்ள மைதானத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முன் விரோதம் காரணமாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தற்போது கொலை செய்யப்பட்ட பார்த்திபனின் அண்ணன் டெஸ்ட்பிராடோ நடராஜன் தனது தம்பி வெட்டி கொல்லப்பட்ட நினைவு நாளில் தனது முகநூலில் அச்சுறுத்தும் விதமாக ,

என் தம்பியின் கொலைக்கு காரணமாக இருந்த உச்சகட்ட துரோகி வீட்டில் இதே போன்ற காரியம் நேற்றிலிருந்து ஒரு வருடத்திற்குள் என் தம்பியே நடத்திக் காட்டுவான் என் தம்பிக்கு நடந்த இதுபோன்ற துரோகத்தை நீங்களும் நானும் யாரும் சினிமாவில் கூட பார்த்திருக்க முடியாது இப்படிப்பட்ட இந்த உண்மை சம்பவத்தினை படமாக எடுத்தால் படமும் ஓடாது அதற்கு காரணம் யாரும் நம்ப மாட்டார்கள் இப்படியுமா துரோகம் செய்ய முடியும் துரோகிக்கு கவுண்டவுன் ஆரம்பமாகிவிட்டது நடக்கும் என்ற நம்பிக்கையில் நான் டெஸ்பிராடோ நடராஜன்
என பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய முகநூல் பதிவு போலீசாரின் பார்வைக்கு ஏற்றியது. எனவே உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உதவி ஆணையாளர் ராஜாராபர்ட் செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் நேற்று இரவு பாடியநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
புழல் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட டெஸ்பிரானோ நடராஜன் மனைவி பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *