பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரிலுள்ள தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வாரியத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வங்கிட வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும். வாரிய முடிவுப் படி ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். மனு அளித்த அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும்.
வீட்டு மானியம் 4 லட்சம் என்பதை ரூ.10 லட்மாக உயர்த்தி வழங்கிட வேண்டும். புதுச்சேரியில் உள்ளதைப் போல தமிழகத்திலும் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் டி.ஜீவா தலைமை வகித்தார். ஏடியூசி மாவட்டப் பொதுச் செயலர் டி.தண்டபாணி கலந்து கொண்டு, கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட துணைச் செயலர் ப.கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர்கள் திருமானூர் மு.கனகராஜ், அரியலூ து.பாண்டியன், நகராட்சி நிர்வாகி ரெ.நல்லுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்ககைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.