நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் மெயின் ரோட்டை ஒட்டியபடி பெரிய மரம் ஒன்று உள்ளது இதன் அடிப்பகுதி பலகீனமாக இருக்கின்றது.

எதிர்வரும் காலம் பருவ மழை அதிக அளவில் பெய்யும் நிலையில் இருப்பதால் இந்த மரம் கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.

இந்த மரத்தை கடந்து தான் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் 2000 மாணவர்கள் மற்றும் நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு வரும் பொதுமக்கள் மேலும் இங்குள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் என அனைத்து தரப்பு மக்களுமே இந்த மரத்தை கடந்து தான் செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

ஆகவே பள்ளி மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் நலன் கருதி புதுவை அரசு பொதுப்பணித்துறை சாலை பிரிவினர் மற்றும் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், இந்த மரம் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் உடனடியாக இந்த மரத்தை அகற்றுவதற்கு முன் வர வேண்டும் என சமூக நல விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *