பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பூரணாங்குப்பம் தனசுந்தராபாள் சாரிடபிள் சொசைட்டி சார்பாக மாணவர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சகாயம் மேரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
ஆசிரியை திருமதி.ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பூரணங்குப்பம் தனசுந்தரம் சாரி டெபுள் சொசைட்டி நிறுவனர் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்,
இதில் தன்னார்வலர்கள் சமூகம் சரவணன், சிறு சேமிப்பு ஆலோசகர் பிரசாந்த், இயற்கை உணவு ஆலோசகர் வண்டிமுத்து, பள்ளி பெற்றோர் குழு உறுப்பினர் பாலச்சந்தர், நுகர்வோர் அமைப்புக்குழு சிவச்சந்திரன், பூரணாங்குப்பம் சதீஷ் கலந்து கொண்டனர், பள்ளி ஆசிரியர் திரு, அரவிந்ராஜ் நன்றி கூறினார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.