செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் நகரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ புஷ்ப விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார
பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களின் திருமண நாளை
முன்னிட்டு மதுராந்தகம் நகரத்தில் எழுந்தருளிய அருள்பாலிக்கும் ஸ்ரீ புஷ்ப விநாயகர் ஆலயத்தில் மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன் ஏற்பாட்டில் ஸ்ரீ புஷ்ப விநாயகருக்கு 16 வகையான பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கழகத் தொண்டர்களுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்.பி.சீனிவாசன்,
மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன்,தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன்,அவைத் தலைவர் வேணு
மாவட்ட பிரதிநிதி சித்தப்பா கிருஷ்ணன்
நகர மன்ற கவுன்சிலர் ஜமீன் காதர் மைதீன்,
அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞரும் மருத்துவருமான ரங்கராஜன்
கருங்குழி பேரூர் கழக செயலாளர் ஜெயராஜ்,
கருங்குழி பேரூராட்சி முன்னாள் தலைவர் மஞ்சுளா புருஷோத்தமன்,அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் லோகம்மாள்,மதுராந்தகம் வடக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவர் வசந்தி
கிளைச் செயலாளர் தங்கப்பன்,மகளிர் அணி நிர்வாகிகள் ஆர்த்தி தண்டபாணி மஞ்சுளா சங்கர் வசந்தி பிரமிளா உள்ளிட்ட ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.