அரியலூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சூட்ட வேண்டும் என்று மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த பேருந்து நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சூட்ட வேண்டும். செப்.15 இல் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் கட்சியினர் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தக்கு, அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இராமநாதன் முன்னிலை வகித்தார். சட்டப் மன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இளவரசன், மாவட்ட துணைச் செயளாலர் கலிங்துராஜ், ஒன்றியச் செயலாளர்கள் சங்கர், அண்ணாதுரை, எழிலரசன், ராமசாமி, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், ரமேஷ்பாபு, பழனிசாமி, நகரச் செயலர் மனோகரன், பொதுக் குழு உறுபினர்கள் கொளஞ்சி, மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொண்டனர். முடிவில் நிர்வாகி கஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.