பொள்ளாச்சியில் 13 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி கலை நிகழ்ச்சியுடன் துவக்கம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி பகுதியில் உள்ள திஷா பள்ளியில் சி. ஐ. எஸ். சி. இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து 600 க்கு மேற்பட்ட மாணவி மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
டேக்வாண்டோ போட்டி 14,17,19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு இடையே மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது 8ம் தேதி துவங்கி 9, 10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநில பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்று துவக்கி வைத்தார் இதில் 13 மாநிலங்களைச் சேர்ந்த மாணவி மாணவிகள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது.