தாராபுரத்தில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை யொட்டி 71 சிலைகள் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன!.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
தாராபுரம் நகர மற்றும் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் திங்கட்கிழமை இன்று ன்று மாலை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மொத்தம் 72 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, அனைத்து சிலைகளும் தாராபுரம், பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை அருகே ஒருங்கிணைத்து கொண்டுவரப்பட்டன.
பின்னர் அங்கிருந்து துவங்கிய ஊர்வலத்துக்கு, இந்து முன்னணி
திருப்பூர் கோட்ட செயலாளர் கோவிந்தராஜ். தலைமை வகித்தார்.தெற்கு நகர தலைவர் சண்முகசுந்தரம். வடக்கு நகர தலைவர் கார்த்தி வடக்கு ஒன்றிய தலைவர் நடராஜ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொள்ளாச்சி சாலையில் துவங்கிய ஊர்வலம், பெரிய கடை வீதி, ஜவுளிக்கடை வீதி, சுல்தானியா பள்ளிவாசல் வழியாக அமராவதி ஆற்றில் நிறைவடைந்தது.
அதன் பிறகு ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்றுப் பாலத்தின் கீழ் அமராவதி ஆற்றில் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை ஆற்று நீரில் கரைத்தனர்.
இதுக்கு முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்
சிவசுந்தர சுப்பிரமணி சிறப்புரையாற்றினார். போட்ட துணைத் தலைவர் தவமணி பாலு உரையாற்றினார்.
ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட திருப்பூர் காவல் கண்காணிப்பாளர்
திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா
தலைமையில் 300, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாராபுரம் செய்தியாளர் பிரபு