திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை இணை இயக்குனர் க.முனுசாமி வகுப்பறைகளை பார்வையிட்டார்,
பின்னர் மாணவிகளுக்கு அறிவுரைகளும், கல்வி முன்னேற்றத்திற்கான வழிமுறைகளையும் கூறினார். மேலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியை, ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எஸ் எஸ் ஏ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளம்பருதி,பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமாவதி மற்றும் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள்,மாணவிகள் கலந்து கொண்டனர்.