திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதை வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் சென்று சண்முகா நதியில் கரைக்க அனுமதி கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு விசாரணையில், பழனி டி.எஸ்.பி.யிடம் மனுதாரர் புதிதாக மனு அளிக்கவும், கிரிவலப் பாதையில் வாகனங்களில் விநாயகர் சிலைகளை கொண்டு செல்லக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய விதிமுறைகளை வகுத்து செப். 12க்குள் அனுமதி வழங்க பழனி நகர் துணை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.