காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வரும் ஹிலுருப்பள்ளி குளம் தூர்வாரும் பணி மற்றும் வள்ளல் சீதக்காதி வீதியில் புதிய பூங்கா அமைக்கும் பணி ஆகியவற்றை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. A.M.H. நாஜிம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் திரு. லோகநாதன் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.