செய்தியாளர் ச. முருகவேலு புதுச்சேரி
புதுவை கரியமாணிக்கம் மந்தைவெளி பகுதியில் ராசிஏஜென்சீஸ் என்று ஒரு கடை உள்ளது பாட்ஷா என்பவர் இடத்தில் இயங்கும் இந்த கடையின் உரிமையாளர் புருஷோத்தமன் ஆவார்.
முக்கிய சாலையில் இயங்கும் இந்த கடையின் மேல் மாடியில் பெரிய அளவில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
ஆனால் மாலை நேரத்தில் இந்த தேசியக் கொடியை இறக்காமல் நள்ளிரவிலும் பறக்க விடப்பட்டு வருகின்றது. மழை வெயில் என எப்போதும் இந்த தேசியக்கொடி பறக்க விடப்பட்டு வருவதால் சமூக ஆர்வலர்கள் தேசிய பற்றாளர்கள் மிகவும் கொதிப்படைந்து உள்ளனர்
ஆனால் எதையும் கண்டுகொள்ளாத கடை நிர்வாகத்தினர் தொடர்ந்து தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கொடியை பறக்க விடப்படுவதற்கு என்று ஒரு தனி வரைமுறை உள்ளது.
மாலை ஆறு மணிக்கு மேல் பறக்க விடப்படக்கூடாது. கிழிந்த கொடியை பயன்படுத்தக் கூடாது. வண்ணங்களை தலைகீழாக வைத்து பறக்க விடக்கூடாது. பாதி கம்பத்தில் பறக்க விடக்கூடாது. மேலும் தேசிய கொடியை மழையில் நனையவிடக் கூடாது என்று பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் மீறி பொதுமக்கள் பார்வையில் முக்கிய சந்திப்பில் கட்டி வைத்த தேசியக் கொடியை பல மாதங்களாக மேற்படி கடையின் உரிமையாளர் புருஷோத்தமன் பறக்கவிட்டு வந்துள்ளார்
இந்த வழியே செல்லும் நெட்டப்பாக்கம் காவல் துறை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் வருவாய் துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் யாரும் இது சம்பந்தமாக கண்டுகொள்ளாதது மன வேதனை ஏற்படுத்துவதாகவும், மேற்படி நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேசியப் பற்றாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.