புதுச்சேரி: உப்பளம் தொகுதி உட்பட்ட பொதுப்பணித் துறை திட்டப்பணிகள் சம்மந்தமாக தலைமைப் பொறியாளர் தினதயாளன் அவர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று சந்தித்து மனு அளித்தார்:
புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் மூலம் நடந்து வரும் பல்வேறு பணிகள் சம்பந்தமாக தலைமை பொறியாளர் தினதயாளன் அவர்களை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று சந்தித்து மனு அளித்து பேசினார்,
குறிப்பாக உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்தாய் நகர், புறாக்குளம், தூர்வாரி நான்கு புறமும் மக்கள் நடைபயிற்சி செல்ல ஏதுவாக நடைபாதை அமைக்கும் பணி மற்றும் உடையார் தோட்டம் பாரதி மில் பின்புறம் கழிவு நீர்வாய்க்கால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் SCSF நிதியில் இருந்து பணிகளை செய்யவும்.
வம்பாகீரப்பளையம், கலங்கரை விளக்கு பாண்டி மெரினா இடத்திற்கு இடற்பட்ட இடத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி நினைவு சின்னம் பூங்காவுடன் அமைக்கவும்.
பெரியப்பள்ளி வார்டில் மிலாது வீதி, சந்தா சாஹீப் வீதி, நையிணியபப்பா பிள்ளை வீதிகளில் சாலை மற்றும் வாய்க்கால் பணிகளை செய்யவும்.
வம்பாகீரப்பளையம் மற்றும் திப்புராயப்பேட்டை மக்கள் பயன்பெறும் வகையில் அம்பேத்கர் சிலையில் இருந்து பாண்டி மெரினா கடற்கரை வரை உப்பனாறு வழியாக சாலை அமைக்கும் பணிகளை செய்யவும்.
வாணரப்பேட்டை, ரயில் நிலையம் கேட் அருகில் உள்ள எல்லையம்மன்கோவில் தோப்பு முதல் காளியம்மன் கோவில் தோப்பு வரை புதியதாக பாலம் அமைக்க வேண்டியும்,
உடையார் தோட்டத்தில் இருந்து நேத்தாஜி நகர்-II வரை செல்லும் உப்பனாரின் கழிவு நீர் வாய்கால் சுற்றி மக்கள் பாதுகாப்பிற்காக மதில் சுவர் எழுப்பி தரவேண்டியும், மேற்கண்ட அனைத்து பணிகளையும் மக்களுக்காக தங்கள் பொது பணி துறையின் மூலம் செய்து கொடுக்குமாறு திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் மனு அளித்து கோரிக்கை வைத்தனர், யாவற்றையும் மக்கள் நலனுக்காக சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை ஏற்று செய்து தருவதாக தலைமை பொறியாளர் சட்ட மன்ற உறுப்பினரிடம் உறுதி அளித்தார். உடன் தொகுதி துணை செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் காலப்பன், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.