புதுச்சேரி இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் பேராசிரியர்முனைவர். மாளபிகா டியோ அவர்கள், (புல முதன்மையர் மேலாண்மை துறை, புதுவைப் பல்கலைக்கழகம் புதுச்சேரி) தமது உரையில் மாணவிகள் தன் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் சங்கங்களின் வழி அனைத்து மாணவிகளுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தினை முன் வைத்தார்கள்.
இந்த கல்லூரியின் வளர்ச்சி நிலை ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய வளர்ச்சியாக அமைந்திருக்கின்றது. இக்கல்லூரிஅதீத வளர்ச்சி நிலையைக் கண்டுள்ளது என்று கூறினார்கள்.
இந்த நிகழ்வு கல்லூரி தன்னாட்சி பெறுவதற்குரிய வாய்ப்பினை அளிக்கக்கூடியதாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்கள். மொத்தமாக 44 சங்கங்கள் இந்த கல்லூரியில் இயங்குகின்றனர் மாணவிகளின் தலைவியாக செல்வி. சோனியா மூன்றாம் ஆண்டு வணிகவல் துறை மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.44 சங்கங்களினுடைய செயல்முறைகளை மாணவிகள் பவர் பாயிண்ட் மூலமாக எடுத்துரைத்தார்கள்.
அழகாகவும் அருமையாகவும் அந்த நிகழ்வு அமைந்தது. எதிர் வருகின்ற கல்வியாண்டில் கல்லூரி நிகழும் நிகழ்வுகள் குறித்து மாணவிகள் எடுத்துரைத்தார்கள். சிறப்பு விருந்தினர் முனைவர். பிரவீன் அவர்கள் (இணை பேராசிரியர் துணை இயக்குனர்,விளையாட்டுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்) அவர்கள் தமது உரையில் கல்லூரியில் இயங்கும் சங்கங்கள் கிராமங்களைத் தத்தெடுத்து அதனைத் தூய்மைப்படுத்தி பராமரித்தலும் அந்தக் கிராமங்களின் வளர்ச்சியைக் காணுதல் வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
சிறப்புவிருந்தினர் முனைவர். சவரிமுத்து அவர்கள் (துணை முதல்வர் வணிகவியல் துறை,தூய புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்.) தமது உரையில் மாணவிகள் ஒழுக்கம் பண்பாடும் நிறைந்தவர்களாக இருக்கின்றார்கள்
அனைத்து சங்கங்களும் சிறந்த முறையில் தங்கள் செயல்முறைகளை எடுத்துரைத்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார். மாணவிகள் தங்களின் ஆளுமைத் திறனை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறுதல் அவசியமான ஒன்று என்பதை அழகாக மாணவிகளுக்கு புரிய வைத்தார்.
விழாவில் அருட்சகோதரி.கிரிஸ்டினா மேரிஅவர்கள்(துப்புயிஅச்சகம்)இவ்வளவு சங்கங்கள் சிறப்பாக ஒன்றிணைந்து நடத்துவதன் மூலமாக விழிப்புணர்வு கருத்துக்களை முன் வைத்தல் வேண்டும் என்றும் மாணவிகள் செயல்முறை திறன் அருமையாக இருந்தது என்பதை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.அ. பாத்திமா அவர்கள் முன்னிலையில்இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது. துணை முதல்வர் முனைவர். மேரி பிரிட்டோ அவர்கள் விழாவிற்கு வந்தோரை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.
இறுதியாக பேராசிரியர் திருமதி பிரியா அவர்கள் நிறுவனச் செயலறியல் துறை நன்றி உரை வழங்கினார் விழா இனிதே நிறைவு பெற்றது