புதுச்சேரி தவளகுப்பம், இடையர்பாளையம் அருகில் புதிதாக உருவாகியுள்ள N R நகரில் அரசு சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் செம்மண் அடித்து சங்கராபரணி ஆற்று வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தடுப்பணை கட்டி உள்ளார்கள், தடுப்பனையை வலிமைப்படுத்தும் விதமாக தடுப்பணை வெளிப்புறமாக சுமார் 1500 பண விதை நடப்பட்டது,
தனசுந்தராம்பாள் சாரி டெபிள் சொசைட்டி சார்பாக பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் சமூகம் சரவணன், பேஷன்ட் கேர் நரேந்திரன், மண்வாசம் ஆறுமுகம், சந்திரமவுலி , ஜூஸ் இராமலிங்கம், வாண்ரபேட் அப்துல் காதர், பிரவீன்குமார், பூரணாங்குப்பம் சதீஷ், பாலச்சந்தர், மனிஷ், லெனின், சந்திரசூட் வண்டிமுத்து கோபிநாத், அபிமன்யு, நைணார்மண்டபம் சந்திரமவுலி, மாணவி சமிக்சா உட்பட தன்னார்வளர்கள் பங்கு பெற்று பனை விதை நட்டனர்.