முருக்கன்குடியில் அருள்மிகு சடையப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், முருக்கன் குடி கிராமத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு சடையப்பர், அருள்மிகு சிவன், அருள்மிகு ராமர், அருள்மிகு விநாயகர், அருள்மிகு முருகன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோவில் முக்கியஸ்தர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறுமத்தூர், முருக்கன்குடி, காருகுடி, பெருமத்தூர், நமையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.