திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முகாமிட்டு நேற்று காலை 9 மணி முதல் கள ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் நடவடிக்கை எடுத்தார்.
பின்னர் பாப்பாக்குடி ஊராட்சியில்அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நரிக்குடி மற்றும் கருப்பட்டி பாலம் கிராம சாலையின் இருபுறமும் 800 மரக்கன்றுகள் நடும் பணி, நரிக்குடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளையும், 54.புலவர் நத்தம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும்,54 புலவர் நத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும்,உழவர் நத்தம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு குறித்து ஆய்வு செய்தார். அதேபோல் ரூ.70,000 மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 43 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.
பின்னர் ஆலங்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல், விதை நெல்கள், உளுந்து இருப்பு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தார் பாலின், பாரம்பரிய நெல் விதை,துத்தநாக சல்பேட்,எம் என் நெல் கலவை, ஆடாதோடா, நொச்சி நாற்றுகள், உளுந்து விதைகள், நெல் உள்ளிட்ட பொருட்கள் மானியத்துடன் கூடிய விலையில் பத்து விவசாயிகளுக்கு வழங்கினார்.
அவளிவ நல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். மேலும் மாவட்ட ஆட்சியர் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு சென்று பதிவேடுகள் உள்ளிட்டவைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு ஆய்வு செய்து மற்றும் வளம் மீட்பு பூங்கா, OHT,புதிதாக கட்டப்பட்டு வரும் OHT ஆகிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் குறைகளை கேட்ட றிந்தனர்.