தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரி தட கள மாணவிகள் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி பி பவித்ரா முதலிடத்தையும் போட்டி பரிசான ரூபாய் 3000 ரொக்கத்தையும் பெற்றார் இதேபோல் கல்லூரி வணிக நிர்வாகத்துறை மாணவி பி.மோனிகா இரண்டாம் இடத்தையும் ரூபாய் 2000 ரொக்கபணமும் பெற்றார் இதேபோல் கல்லூரி விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டு ரொக்கத்தொகை பாராட்டு கேடயங்களை பெற்றார்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி கூட்ட அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் இணை ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா உடற்கல்வி பொறுப்பாளர் டாக்டர் எஸ். சுசீலா விளையாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் வி முனீஸ்வரி உடற் கல்வி ஆசிரியை ஆர் சூரிய பிரபா கல்லூரி பேராசிரியைகள் அலுவலர்கள் கல்லூரி நூலகர் ஆர் ராஜலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளை பாராட்டி பேசினார்கள் கல்லூரி பிஆர்ஓ வாசுகி மாதவன் நன்றி கூறினார்