கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரி என்ற நபர் தனியார் பேருந்தில் அரிவாளுடன் ஏறி நடத்துனர் மற்றும் பொதுமக்களை கொலை வெறி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் குற்றம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் ஹரி என்பதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஆதாரத்துடன் நடவடிக்கை எடுத்த காவல்துறையினரை வெகுவாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.