கலைஞர் 100 வினாடி வினா மண்டல அளவிலான போட்டி மற்றும் திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்திற்காகத் தஞ்சாவூர் சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, அங்கு உள்ள தி.மு.கழகத்தின் மூத்த நிர்வாகியும், திமுக மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினருமான த.காரல் மார்க்ஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் நலம் விசாரித்தார்.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
பொதுவாக மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மற்றும் சென்னை தவிரப் பிற ஊர்களுக்கு நிகழ்ச்கிளுக்கு சென்றால், திமுகவின் வயதில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம். அத்துடன் அவர்களுடன் உரிமையாகப் பழகி நட்பு பாராட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.