கோவையில் ஆயிரம் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கோயம்பத்தூர் ஜெனித் சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது..
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மைதானத்தில் ரோட்டரி கோயம்பத்தூர் ஜெனித் சார்பாக தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் ஆயிரம் நோயாளிகளுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரியை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன.
ரெட் டென்னிஸ் பாலில் 8 ஓவர் பிரிவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் DG.AKS.சுந்தரவடிவேல், கௌரவ விருந்தினர்கள் DGE.செல்லா.k.ராகவேந்திரன்,DGN.ஆர்.எஸ். மாருதி ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களுடன் ரொக்க பரிசுகளை வழங்கினர்.இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிநிதிகள்,ரோட்டரி ஜெனித் சங்க தலைவர் வசந்த், செயலாளர் மதனகோபால்,விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ்,மார்க் ஆபிரஹாம்,கோகுல்ராஜ்,ராஜேஷ்,ரவிராஜ்,மணிகண்டன்,சதீஷ்,தினேஷ் மேத்தா மற்றும் சங்க உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன்,மீனா கோபாலகிருஷ்ணன்,வித்ய பிரகாஷ், சுரேஷ் குமார்,பாண்டியராஜன், Dr.பாலசுப்ரமணியன்,ஈசுவரமூர்த்தி,பாலு,பீட்டர், மோகன், கார்த்திக், ரவிகுமார்,சரண்,கந்தசாமி,அகிலன்,வில்லியம் பேன்,பூபதி,சக்தி,சந்தீப் , சேட்டு,ராஜ்குமார், சாமுவேல்ராஜ் ,தமிழரசன், ஆனந்த்,பிரகாஷ்,சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.