கூடலூர் நகராட்சியில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் அழிப்பு தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா உத்தரவின் படி மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அவர்களின் வழிகாட்டுதலின் படி கூடலூர் நகராட்சி ஆணையாளர் ரா
வாசுதேவன் பொறுப்பு உத்தரவின் கூடலூர் நகராட்சி மார்க்கெட் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆடு கோழி மீன் ஆகிய இறைச்சி கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் அறிவழகன் தலைமையில்
குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
இந்த ஆய்வில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வாரசந்தையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தேதி குறிப்பிடப்படாமல் இருந்த திண்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய். வணிக நிறுவனங்களுக்கு 7000 அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூல் செய்யப்பட்டது
இது குறித்து சுகாதார ஆய்வாளர் விவேக் அறிவழகன் கூறும்போது இது போன்ற அதிரடி ஆய்வுகள் தொடரும் என்றும் இறைச்சி கடைகளில் சுகாதாரமாக அன்றன்று ஆடுகளை நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டியில் அந்த ஆடு நோயற்றதாக சுகாதாரமாக உள்ளது என்பதை ஆய்வு செய்து அங்கு வழங்கப்படும் நகராட்சி முத்திரையுடன் ஆட்டு இறைச்சி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் மேலும் மீன்கள் சுகாதாரமாக அன்று காலை பிடித்து மீன்களை விற்பனை செய்யும் போது உயிருடன் இருக்க வேண்டும் மக்களுக்கு மீன்களை உயிருடன் வெட்டி சுகாதாரமாக விற்பனை செய்ய வேண்டும் ஏனென்றால் உயிரினங்களை அழித்து சாப்பிடுவதில் தான் பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுகிறது எனவே நகராட்சி எடுக்கும் நடவடிக்கை க்கு இறைச்சி விற்பனை செய்பவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வழங்க வேண்டும் இதேபோல் நகராட்சி வாரச்சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் திண் பண்டங்கள் தேதி குறிப்பிட்டு தயாரிப்பு தேதி காலாவதி தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும் முதல் முறையாக காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அபரா விதிக்கப்படும் அடுத்த முறை மீண்டும் காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் லைசன்ஸ் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.