நீலக்குடி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் துவக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு நிறைவு.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட நீலக்குடி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் துவக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு பசுமை தமிழ்நாடு நாள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.தி.சாருஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்பூண்டி.கே. கலைவாணன் அவர்கள் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்கள். மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் உடனிருந்தனர்
தமிழக அரசின் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் தேசிய நெடுஞ்சாலைதுறையின் நிதியை பயன்படுத்தி மாநில அளவில் பெரும் மரக்கன்றுகளை நெடுஞ்சாலையோரங்களிலும் தரங்குன்றிய பகுதிகளிலும் நடுவதற்கான திட்டம் தமிழக அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் பெரும்மரக்கன்றுகளை உற்பத்தி செய்து நடுவு செய்யும் பணிகள் மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வனத்துறையின் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு 20,000 மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பெருமரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது மேலும் பெருமரக்கன்றுகளை நடவு செய்வதற்காக தரம் குன்றி மற்றும் வேலிக்கருவேல் அடர்ந்த பகுதி திருவாரூர் நீலக்குடி கிராமத்தில் மத்திய பல்கலைக்கழக வளாகப்பகுதியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் உள்ள வேலிகருவேல் மரங்கள் அகற்றப்பட்டு 20,000 எண்ணிக்கையிலான பெருமரக்கன்றுகளை நடவு செய்யும் பணி துவங்கி வைக்கப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய தினம் (24.09.2024) மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் முதற்கட்டமாக 1000 மரக்கன்றுகள்bb மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் நேரடி பங்களிப்போடு மரங்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டன மேலும் மாவட்டத்தில் சம்மந்தபட்ட துறைகளின் மூலம் மரக்கன்றுகள் பள்ளி கல்லூரிகளிலும் விவசாயிகளின் நிலங்களிலும் மழைக்காலம் வருவதற்கு முன்கூட்டியே நடப்படவுள்ளது.
நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சௌமியா திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பதிவாளர் திருமுருகன் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் கொரடாச்சேரி ஒன்றிய துணைபெருந்தலைவர் பாலசந்தர் திருவாரூர் வன விரிவாக்க சரக அலுவலர் சரவணக்குமார் வட்டாட்சியர் குருமூர்த்தி ஊராட்சி மன்றத்தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்