போடிநாயக்கனூர் ஏலக்காய் விவசாயிகள் சங்க பொன்விழா இரண்டாம் நாள் கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குரங்கணி சாலையில் அமைந்துள்ள ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி பொன்விழா ஆண்டு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற விழாவில் போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் பங்கேற்றார்

இந்தக் கல்லூரி கடந்த 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இதை யடுத்து இந்த கல்லூரியின் பொன்விழா கோலகாலமாக நிகழ்ச்சிகளுடன் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை தொடங்கியது

இந்த விழாவிற்கு கல்லூரி தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் கல்லூரி உப தலைவர் எஸ் ராமநாதன் கல்லூரி செயலாளர் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் எஸ் பாலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார் விவசாயிகள் சங்கக் கல்லூரி நிர்வரகஸ்தர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்

விழாவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேராசிரியர் முனைவர் ஐ எஸ் பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றினார்.முன்னதாக விழாவிற்கு வந்த ஐ எஸ் பர்வீன் சுல்தானாவுக்கு மேள தாளங்கள் முழங்க தாரை தப்பட்டையுடன் கல்லூரி மாணவ மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள் மேலும் விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு கல்லூரி தலைவர் சுப்பிரமணி ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

துணைத் தலைவர் ராமநாதன் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்தனர் மேலும் முன்னாள் முதல்வர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் முன்னாள் மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

மேலும் ஏழை விவசாயிகள் சங்கத்தின் மேனாள் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ் பைசஸ் போர்டு பிற ஏலக்காய் ஏழு மைய நிர்வாகிகள் பிற கல்லூரியின் நிர்வாகிகளை கௌரவம் செய்து பாராட்டு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் ஜேஜே கன்ஸ்ட்ரக்சன் ஸ் உரிமையாளர்களான இன்ஜினியர்கள் எஸ் எல்வின் ரிச்சர்ட் ராஜ் பவன் ஹோட்டல் உரிமையாளர் ரமேஷ் போடி நகராட்சி நகர மன்ற தலைவர் நகர தந்தை ராஜராஜேஸ்வரி நகராட்சி நகர மன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் போடி நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் வடக்கு மாவட்ட திமுக ஐடி பிரிவு செயலாளர் மகேஸ்வரன் ஏலக்காய் வர்த்தகர் மாரியப்பன் சிகரம் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் இன்ஜினியர் மணிவண்ணன் கிரீன் ராயல் ஹோட்டல் மேலாளர் செல்வம் எஸ்.வி.எஸ் ஞானவேல் நிறுவன பங்குதாரர் ஆதித்யா நியூ விஜயா ஹோட்டல் உரிமையாளர் பெருமாள் முரளி மற்றும் போடி கனரா வங்கியின் மேலாளர் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் ஏலக்காய் வியாபாரிகள் நகர வர்த்தகர்கள் முக்கிய பிரமுகர் கள் கலந்து கொண்டனர் முடிவில் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் சுயநிதி பிரிவு என். பால்பாண்டி நன்றி கூறினார்.

இரண்டாம் நாள் விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் உப தலைவர் எஸ் ராமநாதன் கல்லூரி செயலாளர் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் அனைவரையும் கனிவுடன் உபசரித்து அனுப்பினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *