பொன்னேரி ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் பொன்னேரி நகர்மன்ற தலைவர் மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு 206 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.