தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டாரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைநாள் கூட்டத்தில்
ஆலங்குளம் வட்டம் மருதம் புத்தூர் அம்பேத்கர் நகர் பெதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
அந்தபுகார் மனுவில் கூறியிருப்பதாவது.
நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் ஊரில் வசித்து வருகின்றோம் எங்கள் ஊரில் பல்வேறு சமூகத்தினரும் வசித்து வருகின்றனர்.
இங்கு நாங்கள் ஊர் நாட்டாமை தலைமையில் ஒற்றுமையாக இருந்து வரும் சூழ்நிலையில்
தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு சில நபர்கள் நாங்கள் வசிக்கும் பகுதி பொது மக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறு ஏற்படுத்துவதோடு பொதுமக்களுக்கு குந்தகம், அச்சுறுத்தல் ஏற்படும் வகையில்ஆயுதங்களுடன் சுற்றி வருகின்றனர்.
இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் சார்பில் 20 க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து புகார் மனு அளித்துள்ளோம்.
மேற்படி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.