காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் இரண்டாம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததின் பேரில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள 36 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன
சமுசிகாபுரம் ஊராட்சி மன்றம் கிராம சபை கூட்டம் சங்கரபாண்டியபுரம் சமுதாய கூடத்தில் வைத்து தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது செயலர் ராமசுப்பு வரவு செலவு அறிக்கை மற்றும் இதர செயல் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்
சம்சிகாபுரம் சங்கரபாண்டியபுரம் மற்றும் இதர பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் கழிவு நீர் மற்றும் மின்விளக்கு வசதி உள்பட பல்வேறு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டன கூட்டத்தில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 36 கிராம பஞ்சாயத்துகளிலும் இதே போன்ற கிராம சபை கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.