ஜிடிஎன் கல்லூரியின் சுற்றுச் சூழல் கழகம் சார்பில் ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம்
இளைஞர் செயல்பாடு மற்றும் பருவநிலை மாற்றம்” என்ற தலைப்பில் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம் அவர்களும் கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் தலைமை உரையாற்றினார்.
சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. ரவிச்சந்திரன்,”இளைஞர் செயல்பாடு மற்றும் பருவநிலை மாற்றம் பற்றியும் கருத்தரங்க நோக்கம் மற்றும் சிறப்புகளை எடுத்துரைத்து,விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்று பேசினார்.
அடுத்ததாக இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கருத்தரங்க சிறப்பு விருந்தினர் சுற்றுச் சூழல் ஆர்வலர், தன்னம்பிக்கை பேச்சாளர் தமிழக அரசின் பசுமை காப்பாளர் விருது பெற்ற திரு. அசோக்குமார் அவர்கள், “இளைஞர் செயல்பாடு மற்றும் பருவநிலை மாற்றம்” என்ற பொருண்மையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அதனை கட்டுப்படுத்த இன்றைய இளைஞர்கள் செய்ய வேண்டிய பணிகள், இயற்கை பாதுகாப்பதில் இளைஞர்களின் தேவை, அவர்களின் அணுகுமுறைகள், பங்களிப்பு, செயல்முறைகள், மரம் நடுதலின் சிறப்புகள் என்று பல்வேறு கருத்துக்களை மாணவர்கள் பயன் பெரும் வகையில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சுற்றுச் சூழல் கழகத்தின் சார்பாக பனை விதைகள், விதைப்பந்துகள் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்க நிகழ்வில் சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பொருளியல் துறை உதவிப்பேராசிரியர் அருண் நன்றி தெரிவித்தார்.