செய்தியாளர் ச. முருகவேல் புதுச்சேரி
புதுவை முன்னாள் முதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான வெ. வைத்தியலிங்கம் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
அவரது சொந்த ஊரான மடுகரையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன மடுகரை அரசு பள்ளிகளைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி அனைத்து பிரிவு நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மடுகரை மந்தவெளி பகுதியில் பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.