செங்கோட்டை அடுத்துள்ள வடகரையில் தொடர்ந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வரும் யானைகளை வனத்திற்குள் விரட்டவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடவும், தோண்டப்படும் அகழிகளை ஆழப்படுத்திடவும் வட்டாட்சியர் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டு கோரிக்கை விடுப்பு.
தென்காசி மாவட்டம் வடகரையில் சில மாதங்களாக யானைகளால் விவசாய பயிர்கள் அழிந்து வருவதோடு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி எஸ்டிபிஐ கட்சி தொடர் முன்னெடுப்புகளை எடுத்து வந்தது..
இந்நிலையில் அக்கட்சியினர் விடுத்துள்ள
சாலை மறியல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போன்ற அறிவிப்புகளால் காவல்துறை மூலமும் மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் வட்டாட்சியர் முன் நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒரு சில முடிவுகள் எட்டப்பட்டது..
இருப்பினும் தொடர்ந்து யானைகளால் பயிர்கள் நாசமாவதை தடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு குடியேறுவோம் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முத்து முகம்மது அறிவிப்பு வெளியானதைதொடர்ந்து வட்டாட்சியர் முன்பாக கலந்தாய்வு கூட்டத்தில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் வனத்துறையினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது