செய்தியாளர் ச. முருகவேலு புதுச்சேரி
நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுரை மூகாம்பிகை நகரில், குடிநீர் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது இதுகுறித்து பல தடவை புகார் தெரிவித்தும் தொகுதி எம்எல்ஏ உட்பட புதுச்சேரி குடிநீர் பிரிவு துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வெகுண்டு எழுந்த அப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு காலை 7மணி அளவில் மடுகரை-புதுவை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் உதவி ஆய்வாளர் வீரபத்திரன் பொதுமக்களிடம் சமாதான முயற்சியில் ஈடுப்பட்டார். பின்னர் பொதுமக்கள் பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் பிரச்சனையை சரிசெய்து தருவதாக உத்திரவாதம் தரவேண்டும் என்று கூறி தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த இளநிலை பொறியாளர் திருவேங்கடம் நேரில் வந்து பொதுமக்களிடம் 20நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.