ஏழை எளிய மக்களுக்கு கம்பளி போர்வைகள் வழங்குதல்

ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ஜீவநதி தொண்டு நிறுவனம், பெங்களூர் வழியாக 16.10.2024 அன்று எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், இ, புதுக்கோட்டை, நேருநகர், ஆரோக்கியா மாதா நகர் கக்கன் ஜி காலனி, ஜே.கே, காலனி, முருகமலை பகுதிகளிலுள்ள கைம்பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 200 போர்வைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் எஸ். யேசுராணி கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் சாந்த மேரி ஜோசிட்டா கல்லூரியின் இல்லத் தலைமை சகோதரி முனைவர் பாத்திமா மேரி சில்வியா எண்டப்புளி பஞ்சாயத்துத் தலைவர் பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு சிறம்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஜீவநதி தொண்டு நிறுவனத்தின் நிறுவுனர் சகோதரர் அகஸ்டின் மற்றும் ஜீவநதி தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் சீமா பர்னான்டீஸ், ரோஸி, ரோகினி சுனிதா, ஜான் அனிடிக் ஹரி, ரென்னி தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக, குளிரை தாங்க கூடிய கம்பளி போர்வைகளைக் கொடுத்து உதவினார்கள்.

மேலும் எமது கல்லூரியில் பயிலும் தந்தையர்களை இழந்த மூன்று மாணவிகளின் குடும்பத்திற்கு ரூபாய் 15000/- மதிப்பிலான மூன்று ஆட்டுக்குட்டிகள் வாழ்வாதாரத் வழங்கப்பட்டன. தேவைகளுக்காக இந்நிகழ்வில் 250 நாட்டுநலப் பணித்திட்டத் தன்னார்வலர்களும், நாட்டுநலப்பணித்திட்டப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *