முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் தங்கப் பதக்கம் பெற்றார்.

சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் 18.10.2024 அன்று நடைபெற்ற தமிழக அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பிரிவில் தடகளப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் சி.சமுத்திரம் தமிழக அளவில் முதலிடம் பெற்று தருமபுரி மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றிப் பெற்ற மாணவனுக்கு பரிசுத் தொகையாக 1 இலட்சமும் மற்றும் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றிப் பெற்ற மாணவனுக்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த், செயலாளர் காயத்ரி கோவிந்த், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சி.பரஞ்சோதி, கல்லூரி உடற் கல்வி இயக்குநர் ஆர்.சி. கார்த்திக், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *