கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
15 அடி ஆழக் குழியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தவறி விழுந்து விபத்து… ஒருவர் பலி- போலீசார் விசாரணை…….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று
வருகிறது இந்த நிலையில் அப்பகுதியில் சுங்கச்சாவடியானது அமைக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் 15 அடி ஆழக் குழி ஒன்று தோண்டப்பட்டு இருந்தது இந்த நிலையில் பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் தனது நண்பருடன் பொங்கலூர் பகுதியில் இருந்து மாதப்பூர் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்
அப்போது எதிர்பாராத விதமாக அந்த 15 அடி ஆழக்குலியில் தவறி விழுந்துள்ளார் மேலும் பல்லடம் பகுதியில் கனமழை பெய்து அதன் காரணமாக அந்த 15 அடி ஆழக்குழியில் மழை நீர் ஆனது தேங்கியது தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து 15 அடி ஆழம் கொண்ட குழியில் சிக்கி இருந்த இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
இந்த நிலையில் ஓட்டுநர் ஆனந்தராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார் மேலும் அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பல்லடம் அருகே சுங்கச்சாவடிக்காக தோண்டப்பட்ட குழியில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் பயணித்த நபர்கள் தவறி விழுந்து சம்பவத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.