பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை முழு கொள்ளளவை எட்டியது
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது
ஆகும். இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக நீர்வரத்து பகுதிகளான சிறுமலை, வகுத்து மலை, செம்போத்து கரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக நீர்வரத்து தொடங்கியது.
இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களில் 15 அடி தண்ணீர் நிரம்பி அணையின் முழு கொள்ளளவான 29 அடி எட்டியது .
இன்றும் 15 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை மறுகால் பாயும் நிலையில் உள்ளது.
இந்த அணையின் கரைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளளர்.
மேலும் சாத்தியார் அணைப்பகுதியில் மழை பெய்தால் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த அணையின் பாசனவசதி பெரும் பத்து கண்மாய்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து சாத்தியார் அணை ஐந்தாவது ஆண்டாக மறுகால் பாயும் சூழ்நிலையில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள 2500 ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் பாசன விவரம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.