செங்குன்றம் செய்தியாளர்
கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள SAP CBSE ட்யூஷன் சென்டரில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மாணவர்களின் கல்வியுடன் கூடுதலாக, இந்த கண்காட்சி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி, அவர்களின் புதுமையான சிந்தனைகளைப் பரிசோதனைகளும், திட்டங்களாகவும் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, அவர்களின் சமூக உரையாடல் திறன், நிகழ்வு முன்னெடுக்கும் திறன் மற்றும் சுயவளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த உதவுகின்றன.
இதில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மாணவர்களின் ஆற்றல்களை ஊக்குவித்து அவர்களின் மூலமாக பல திறமைகளை வளர்த்துக் கொள்ள , அடிப்படையில் இருந்து அறிவியல் சார்ந்த கல்வி கற்றுத் தரப்பட்டு அதனை செயல் வடிவமாக பேச்சுத் திறன் ,செயல் திறன் ,மற்ற திறன்களை வெளிப்படுத்தவும் நோபல் பரிசு பெறுவதற்கு ஊன்றுகோலாக அமையவும் இந்த அகாடமி அறிவியல் கண்காட்சியில் சூரிய ஆற்றல் , காற்றாலை ஆற்றல் , கடல் ஆற்றல், மற்றும் மனிதனுக்கு வரக்கூடிய நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் அதனைத் தெரிந்து கொள்ளவும் பல முன்னேற்றமான அறிவியல் சாதனங்களை மாணவர்கள் உருவாக்கி அதனை செயல் வடிவமாக எடுத்துரைத்தனர்.
மாணவர்களுக்கான இந்த வாய்ப்பு, தங்கள் கல்விக்குப் பரிமாணத்தை அதிகரிக்கும் வகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தை ஊக்குவிக்கின்றது.
மேலும் இந்த கண்காட்சியை கண்டுகளித்த பல பள்ளிகளில் இருந்து மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் இதனை ஆச்சரியத்தில் பார்த்து வியப்புற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அக்காடமியின் முதல்வர் சம்பத்குமார் சிறப்புடன் செய்திருந்தார்.