நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
தலைஞாயிறு அருகே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு பனைவிதை நடும் விழா நடைப்பெற்றது…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மரக்கன்றுகள் நட்டும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட தலைஞாயிறு, ஆலங்குடி,மணக்குடி,காடந்தேத்தி உள்ளிட்ட பகுதிகளில் அரிசந்திரா ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகளை கட்சியின் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நட்டனர்.இந்த பனை விதைப்பு பணியில் ஒருங்கிணைந்த நாகை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகவேல், செயலாளர் அறிவொளி, தலைஞாயிறு நகர செயலாளர் கோல்ட்சன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஏங்கல்ஸ், கட்சி நிர்வாகிகள் ஜெயவேல், வினோத், தாசன்,கணேஷ், அருண், தினேஷ் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்றனர்.மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சக்கிலியன் வாய்க்கால் கரையோரங்களில் நடப்பட்ட பனைவிதைகள் செழிப்பாக வளர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.