தென்காசி மாவட்டம், பாம்புக்கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழத் திருவேட்டநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கும்படி பயணிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷனுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டது.
இதனை ஏற்று, வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி அவர்களின் அறிவுத்தலைத் தொடர்ந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்த நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நிழற்குடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், நிர்வாகிகள் சண்முகராஜ் மணிகண்டன் , செல்வராஜ் பெரியசாமி, பேச்சிமுத்து, செந்தில் ,வேலுச்சாமி, சிவா, ரவீந்திரன், கண்ணுத்துரை, ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிழற்குடை அமைத்துக் கொடுத்த வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷனுக்கு பயணிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.