திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டியில் 19 நடுநிலை பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தனர். இதில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 19 நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி,அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்கள் உருவாக்கிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக்குதல் மட்டுமல்லாமல், வருங்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்வது பற்றி ஊக்குவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படுவர்.