காசு பணம் இரண்டாவது முதலில் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பளு தூக்கு வீரர் பொதுமக்களுக்கு அறிவுரை
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான பளு தூக்கும் போட்டியில் கோவையை சேர்ந்த தர்மதுரை பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று வெற்றி பெற்று கோவை திரும்பிய அவருக்கு கோவை விமான நிலையத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பளு தூக்கு வீரர் தர்மதுரை:-
கடந்த ஓராண்டுகளாக இதற்காக பயிற்சி எடுத்து உலக அளவில் போட்டியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் வருங்காலத்தில் இது போல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்
தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் 11 நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று இதில் அதிகப்படியாக பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா சேர்ந்தவர்கள் திறமையாக செயல்பட்டதாகவும் அவர்கள் தொடர்ந்து இந்தியா சார்பில் இவர் செயல்பட்டு பரிசு வென்றதாக தெரிவித்தார் கூறினார்.
அதேபோல் இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்ததாகவும் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் ஸ்டாலின் அறிவுத்தின்படி விடாமுயற்சியோடு இந்த போட்டியில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
காசு பணம் இரண்டாவது முதலில் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பளு தூக்கு வீரர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார் மேலும் தினசரி தங்கள் உடலுக்காக 45 நிமிடம் நேரம் ஒதுக்கினால் ஆரோக்கியமாக இருக்க முடியும் எனவும் கூறினார்.