திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு 9715328420
தாராபுரத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தலைமறைவாகி டெல்லியில் பதுங்கியிருந்த குற்றவாளி கைது:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு திருநெல்வேலியை சேர்ந்த செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு தாராபுரம் பகுதியில் பாணிபூரி கடை நடத்தி வந்த கோர் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் ஷா என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது மனைவி செல்வியை அடித்து கொன்றதுடன், அப்போதே அவர் தப்பித்து தலைமறைவாகிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் எதிரியை தேடி பலமுறை பீகாருக்கு சென்று விசாரணை செய்தும் எதிரி எந்த மாநிலத்தில் பதுங்கியுள்ளார் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா. இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தாராபுரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ்குமார். அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணத்தில் விசாரணை செய்ததில், மேற்படி தலைமறைவாக இருந்த சுரேஷ் ஷா-48, த/பெ பெதம்பஜா, கட்கா கிராமம், சிங்வரா, தர்பங்கா. பீகார் மாநிலம் என்பவர் டெல்லியில் பதுங்கி பணிபுரிந்து வந்தது தெரிந்து உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான 04 காவலர்களுடன் கூடிய தனிப்படையினர் மேற்படி நபரை டெல்லியில் வைத்து 06.11.24ம் தேதி கைது செய்து பிறகு அவரை தாராபுரம் அழைத்து வந்து விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேற்படி எதிரியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றி எதிரியை கைது செய்த
தனிப்படையினரான உதவி ஆய்வாளர் திரு.சிவராஜ், மற்றும் காவலர்களான கார்த்திக், மதியழகன், ராமர், பாபுராஜ் ஆகியோரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாகப் பாரட்டினார்கள்.