விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி அருகே வளையாபதி தெருவில் கடந்த ஒரு வார காலமாக நள்ளிரவில் வீடுகளில் . மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் கொள்ளை முயற்சி ஈடுபட்ட போது சுதாரித்துக் கொண்ட வீட்டுக்காரர்கள் லைட்டை போடும்போது தப்பி ஓடுவதும் வழக்கமாக இருந்துள்ளது நேற்று பட்டப்பகலில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து கத்தியை காட்டி பெண்களை மிரட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது பெண்கள் கூச்சலிட்டபடி தப்பித்து ஓடி உள்ளார்
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த 30க்கு மேற்பட்ட பெண்கள் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க திரண்டு வந்தனர் காவல் நிலையத்தில் வேறொரு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதால் காவல் நிலையத்தை பூட்டி காவலர்கள் உள்ளே அனுமதிக்காமல் இருந்ததால் பெண்கள் வெளியே காத்திருந்தனர்
இரண்டு பேர் மட்டும் வந்து புகார் அளிக்க அனுமதிப்பதாக காவல்துறை தெரிவித்ததை அடுத்து இன்ஸ்பெக்டர் அசோக்பாபு புகாரை பெற்றுக்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து வெளியே பெண்கள் உயிர் பயத்தில் வாழ்வதாகவும் பட்டப்பகலில் இது போன்று கொள்ளை முயற்சிகள் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதன் சிசிடிவி காட்சி உள்ளது அதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்து விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் கோரிக்கையை முன் வைத்ததாக தெரிவித்தனர்