கோவையை அடுத்த கோவில்பாளையம் கணேசபுரம் பகுதியில் உள்ள பேரூரடிகளார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அரங்க பிரிவு உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
கோவை பேரூர் ஆதினம் சார்பாக முதலிபாளையத்தில் பேரூரடிகளார் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது..
பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது..
இந்நிலையில் மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் மகப்பேறு,கூர் நோக்கு அறுவை சிகிச்சை,அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பிரிவுகள் நவீனமயமாக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா மருத்துவமனையின் தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான பேரூராதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்றது..
உலகச் சர்க்கரை நோய் தினம் மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் சி.சுப்பிரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, பண்ணாரியம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், ரூட்ஸ் குழுமத்தின் தலைவர் கி.இராமசாமி, சக்தி மசாலா குழும இயக்குநர் சக்தி துரைசாமி, சாந்தி துரைசாமி, கத்தார் மருத்துவர் செந்தில்ராசு ஆகியோர் கலந்து கொண்டனர்..
தலைமை விருந்தினர்களாக,
சிரவையாதீனம் குருமகாசந்நிதானங்கள் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர அடிகளார், பழனியாதீனம் குருமகாசந்நிதானங்கள் திருப்பெருந்திரு சாது சண்முக அடிகளார், தென்சேரிமலையாதீனம் குருமகா சந்நிதானங்கள் திருப்பெருந்திரு முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோர் அருளுரை வழங்கினர்.
விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன்,தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி,மற்றும் டேனி ஷெல்டர்ஸ் சிவராமன் கந்தசாமி, எஸ்.ஏ.பஷீர்,டோனிசிங் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்..
விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் புதிதாக அமைக்கப்பட்ட,
அறுவைச்சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, நவீன ஆய்வகம், உணவுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்..
தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சர்க்கரை நோய்ப் பரிசோதனைக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்..
நிகழ்ச்சியின் இறுதியில்,.
பேரூரடிகளார் மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலர் பொன்முடிச்செல்வன் நன்றியுரை வழங்கினார்.
திறப்புவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பேரூர் தவத்திரு
சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியின் மாணவர்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.