விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மாவரசியம்மன் கோவில் ஆறு, மலட்டாறு, முள்ளிக்கடவு ஆறு களில் தண்ணீர் வரத்து அதிகமாகி அய்யனார் கோவில் ஆற்றில் கலந்து வருகிறது. அய்யனார் கோவில் ஆற்றை கடந்து அய்யனார் கோவில் செல்வதற்கு பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளனர். அய்யனார் கோயிலில் இருந்து வரும் ஆறு ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் நகராட்சி ஆறாவது மைல் கோடை நீர் தேக்கம் வந்து சேரும் தண்ணீர் பொங்கி வரும் புது புனலாக பொங்கி வழிகிறது. காண்போர் கண்களுக்கு இது ரம்யமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து
நகர் மன்ற தலைவி பவித்ராஷியாம்
மற்றும் ஆணையாளர் நாகராஜ் ஆகியோர் கூறுகையில் தற்போது நீர்த்தக்க டேம்
19 அடி உயரம் நீர் நிரம்பிய நிலையில் ஆற்று தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நேரடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் நகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல் நடவு செய்யும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடிநீர் தேக்கத்திற்கு இந்த ஆண்டு பஞ்சம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.