செங்குன்றம் செய்தியாளர்
புழலில் வீட்டில் மேல் மாடியில் பெயிண்ட் அடித்தவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
அண்ணா நகர் பாடி குப்பம் சாலை காமராஜ் நகரை சேர்ந்தவர் வீரா ( வயது 47 ) புழல் அடுத்த சூரப்பட்டு ரோடு செந்தில் நகர் நாலாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் காண்ட்ராக்டர் ஏழுமலை மேஸ்திரியின் மூலமாக பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரவழைக்கப்பட்டு வேலையில் இருந்தார்.
நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் முதல் மாடியில் பெயிண்ட் அடித்தபோது மேலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் உடனே பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இது குறித்து புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.