கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே மூப்பக்கோவில் ஸ்ரீ சோமேஸ்வரர் பெருமாள் கோயில் திருக்கல்யான் வைபவம் :ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் ஸ்ரீ சங்கர நாயகி அம்மையார், ஶ்ரீ சோமேஸ்வரர் பெருமாள் வரதராஜபெருமாள் திருக்கல்யான் வைபவம் நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் உற்சவர் பெருமாளுக்கு கிரீட ஆபரணங்கள் அணிந்தும் ஶ்ரீ சங்கர நாயகி தாயார் மணக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர்.
முன்னதாக யாக குண்டத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு திருகல்யாண மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது . பின்னர் ஶ்ரீ சோமேஸ்வரர் பெருமாள் சமேத ஶ்ரீ சங்கர நாயகி
தாயாருககு திருகல்யான பட்டுபுடவை சமர்ப்பிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது . மூன்று முறை மாலை மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து ஶ்ரீ சங்கர நாயகி சமய ஸ்ரீ சோமேஸ்வரர் பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.