கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ,2732 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர்..

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது..

கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற, விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி,டாக்டர் K. அழகுசுந்தரம் கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார்..

அப்போது பேசிய அவர்,நவீன தொழில் நுட்பங்களை மாணவிகள் ஆர்வமுடன் கற்று கொள்ள வேண்டும் என்று கூறிய அவர்,பட்டப்படிப்புகளை முடித்து செல்லும் மாணவிகள் தங்களது இலட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்..

உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் என்று கூறிய அவர், உழைப்பால் உயர்ந்த பெண்களின் வரலாற்றை சுட்டி காட்டி பேசினார்..

தொடர்ந்து 2020 – 21 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் ரேங்க் பெற்ற 48 மாணவிகள் மற்றும் 2732 பேருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து புதிய பட்டதாரிகளுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர். பி. பி. ஆரதி உறுதிமொழி ஏற்புரை வாசித்தார்..

நிகழ்வின் இறுதியில்,
கல்லூரிச் செயலர் டாக்டர். என். யசோதா தேவி நன்றியுரை வழங்கினார்..

பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், மாணவிகள் பெற்றோர்கள்,
உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *