அரசமைப்புச் சட்டப் பவள விழா நாளில் அதனைப் பாதுகாக்கஒன்றிணைவோம்.

மனிதநேய மக்கள் 
கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் 
ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி

நவம்பர் 26 இந்திய அரசமைப்புச் சட்ட நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். கூடுதல் சிறப்பாக இந்த ஆண்டு அரசமைப்புச் சட்ட உருவாக்கப்பட்ட  பவள விழாவைக் கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். 

75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடைமுறைக்கு வந்த  அரசியலமைப்புச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அவரை தீர்ப்பு வழியாகப் பவள விழா  பரிசை வழங்கி இருப்பது மகிழ்ச்சி 
அளிக்கிறது. 

சுப்பிரமணிய சாமி உள்ளிட்டவர்கள் 
தொடுத்த வழக்கில் அரசியலமைப்புச் சட்டமுகப்புரையில் இடம்பெற்று இருக்கும் மதச்சார்பின்மை சமவுடைமை ஆகிய சொற்கள்
1976 ஆம் ஆண்டு 42வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலமாக இடைச்செருகலாக்கத்
திணிக்கப்பட்டது. எனவே அவற்றை அரசியலமைப்புச் சட்ட முகப்புரையிலிருந்து நீக்க
வேண்டும் என்று கோரி இருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மதச்சார்பின்மையையும்
சமவுடையைமயும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது. எனவே 1976 ஆம்ஆண்டு முகப்புரையில்  சேர்க்கப்பட்ட அந்த வரிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைத் தான் பிரதிபலிக்கிறது என்று தமது தீர்ப்பில் கூறித் தொடுக்கப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். 

நமது அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மை ஜனநாயகம் சமவுடைமை ஆகியவற்றின
அடிப்படையில் அமைந்திருக்கும் தலைசிறந்த அரசியல் சாசனச் சட்டமாகும். விடுதலைப் போராட்ட வீரர்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக புரட்சியாளர் அம்பேத்கர் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட
 அரசியலமைப்புச் சட்டத்தைப்
பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் உறுதியாகத் துணை நிற்போம். 

மனிதநேயமக்கள் கட்சியின் சார்பில் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டப் பவள விழா நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *