தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபிக்கு கோவை மரக்கடை நாகா மொஹல்லா தக்னி அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பாக பாராட்டு…
கோவையில் மாவட்ட அளவில், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் தலைமையில் நடைபெற்றது..
இந்த கூட்டத்தி்ல் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் முகம்மது ரஃபி கோவை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினரின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து கூறிய நிலையில், தற்போது கோவை மாவட்ட சிறுபான்மை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் செயல் வடிவம் பெற்று வருகின்றன.
இதற்கு காரணமான கோவையை சேர்ந்த தமிழக சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபிக்கு ஜமாத் அமைப்பினர் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கோவை மரக்கடை நாகா மொஹல்லா தக்னி அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது..
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பள்ளிவாசல் ஜமாத் அலுவலகத்தில் நடைபெற்ற இதில்,சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபிக்கு சால்வை அணிவித்து ஜமாத் நிர்வாகிகள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்..
இந்நிகழ்ச்சியில், நாக மொஹல்லா அஹ்லே தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாகிகள்,முத்தவல்லிஅல்லாமாலிக்,தலைவர் A.R.அப்துல் ஜப்பார் ,செயலாளர் A.H.அப்துல் நயீம்,பொருளாளர் A. அக்சன் ஜமீல்,
தணிக்கையாளர் A.K.முஹம்மத் ஜூனைத்,
மக்கள் தொடர்பு அலுவலர் A.அபூபக்கர் சித்தீக்,துணை முத்தவல்லி
அமானு லாஹ்கான், துணை தலைவர்கள் ஷபீர் அஹ்மத்,ஜமீல் அஹ்மத், துணை செயலாளர், சான்பாஷா (எ) ஃபோர்ம் பாபு, இணை செயலாளர் சையத் அமீர் ஹம்ஜா,நிர்வாக உறுப்பினர்கள்
அன்வர் பேக் (எ) ஷானவாஸ் சிராஜ்,பர்கத்துல்லாகான்,முஜிப் நவாஸ்
மற்றும்,தெற்கு மாவட்ட தி.மு.க.சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர் டிஸ்கோ காஜா,பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர்,வழக்கறிஞர் இஸ்மாயில்,அபுதாகீர் உட்பட கலந்து கொண்டனர்..