திருவாரூர் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பு இறகுப்பந்து போட்டிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருவாரூர் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு விழாவை முன்னிட்டும் திருவாரூரில் பிரம்மாண்ட இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.
திருவாரூர் ஒன்றிய
விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளை மாவட்ட கழக செயலாளர் பூண்டி.கே கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஒன்றிய கழக செயலாளர் புலிவலம் ஏ. தேவா, நகர கழக செயலாளர் வாரை. எஸ். பிரகாஷ், பேரூர் கழக செயலாளர் பூண்டி கே. கலைவேந்தன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர்கள் எம். என். ராஜா, வி.என்.ஆர். பன்னீர்செல்வம், பி.ஜி.ஆர். ராஜாராமன், பெ.இளவரசன், ஜி. கோபிநாத் தீ விமல்ராஜ் போ பத்ம பிரசாத், ஜாகிர் உசேன், எழில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் தேவா, துணை அமைப்பாளர்கள் சரவணன், சந்திரசேகர்,சிராஜ்,மாதவன் பாலாஜி உள்ளிட்டோர முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் வந்திருந்த பூப்பந்தாட்ட அணிகள் மோதிய இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான புலிவலம் ஏ. தேவா வழங்கினார்.
போட்டியில் முதலாவதாக வந்த அணிக்கு ரூபாய் 15,000 ரொக்க பரிசும், இரண்டாவதாக அந்த அணிக்கு ரூபாய் 12000, ரொக்க பரிசும் மூன்றாவதாக அந்த அணிக்கு ரூபாய் 8000 ரொக்கப்பரிசும், நான்காவது இடம்பெற்ற அணிக்கு ரூபாய் 6000 ரொக்க பரிசும் வழங்கப்பட்டன. முதல் நான்கு இடங்களை பிடித்த இந்த அணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன.
திருவாரூர் நாகை பிரதான சாலையில் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஒன்றியவிளையாட்டு மேம்பாட்டு அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்